சீனாவில் இருந்து புதுக்கோட்டை திரும்பிய நபர் திடீர் உயிரிழப்பு... கொரோனா பீதியில் தமிழகம்..?

By vinoth kumarFirst Published Feb 17, 2020, 1:29 PM IST
Highlights

சீனாவை சின்னாபின்னமாக்கி வரும் கொரோனா வைரஸ்க்கு இதுவரை 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 66,000 மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் பலர் கல்வி மற்றும் தொழில் சம்பந்தமாக சீனாவுக்கு சென்றிருந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்க வேண்டுமென குடும்பத்தினர் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

சீனாவில் இருந்து திரும்பிய புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவை சின்னாபின்னமாக்கி வரும் கொரோனா வைரஸ்க்கு இதுவரை 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 66,000 மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் பலர் கல்வி மற்றும் தொழில் சம்பந்தமாக சீனாவுக்கு சென்றிருந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்க வேண்டுமென குடும்பத்தினர் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்தனர். 

இதையும் படிங்க;-  https://tamil.asianetnews.com/politics/case-against-dayanidhi-maran-minister-jayakumar-q5s6bx

மத்திய உள்துறை அமைச்சகம் சீனாவில் சிக்கித்தவித்த இந்தியர்களை தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து வந்தபோது, அதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பினர். விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க;- 

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டல் அதிபர் சக்திகுமார். இவர் கடந்த 4-ம் தேதி சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். ஆனால், வந்த சில நாட்களிலேயே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை இருந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- 

சக்திகுமார் இறந்தது குறித்து சுகாதாரத்துறையிடம் கேட்டபோது அவர் சீனாவில் இருந்து திரும்பியவர் என்பதே அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. சீனாவில் இருந்து திரும்பியவர்களை கண்காணித்து வருவதாக கூறும் நபர்களின் பட்டியலில் சக்திகுமார் பெயர் இடம்பெறவில்லை. இந்த சூழலில் சக்திகுமார் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் இறந்துள்ள சம்பவம் சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்திகுமார் உண்மையிலேயே மஞ்சள் காமாலை நோயால்தான் இறந்தாரா? அல்லது கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தாரா? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!