அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்..! மூவர் உடல் நசுங்கி பலி..!

By Manikandan S R S  |  First Published Jan 12, 2020, 3:04 PM IST


புதுக்கோட்டை அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இருக்கிறது பில்லமங்கலம் கிராமம். இங்கிருக்கும் சாலையில் இன்று காலையில் அரசு பேருந்து சென்னையில் இருந்து சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே சாலையின் எதிரே லாரி ஒன்று வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக பேருந்தும் லாரியும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் பேருந்து முன்பக்கத்தின் ஒரு பகுதி அப்பளம் போல நொறுங்கியது.

Tap to resize

Latest Videos

லாரி வேகமாக மோதியதில் பேருந்து ஓட்டுநர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். மேலும் பேருந்தில் இருந்த 10 வயது சிறுவன் கதிர் மற்றும் கௌஷிக் ஆகியோரும் படுகாயமடைந்து உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த பிற பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்தி சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவலர்கள் உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
 

click me!