புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
புதுக்கோட்டை அருகே காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கார் மோதிய வேகத்தில் பேருந்து அடியில் சிக்கியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் பேருந்து அடியில் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்து அடியில் சிக்கிக்கொண்டிருந்த 3 பேரை உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.