பெண்ணின் குடும்பத்தினர், ராமராஜின் குடும்பத்தினருடன் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், ராமராஜ் குழந்தை பிறந்ததற்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. திருமண ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று கூறிவந்துள்ளார்.
தன்னுடைய காதலிக்கு குழந்தை பிறந்ததற்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை கூறியும் திருமணம் ஏற்பாடு செய்து வைத்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கீழபொருவாய் கிராமத்தை சேர்ந்தவர் மலைக்கண்ணு. இவரது மகன் ராமராஜ் (19). இவர், 19 வயதுடைய இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். நாளடைவில் அவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கவே, கர்ப்பமடைந்த அப்பெண்ணுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து பெண்ணின் குடும்பத்தினர், ராமராஜின் குடும்பத்தினருடன் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், ராமராஜ் குழந்தை பிறந்ததற்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. திருமண ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று கூறிவந்துள்ளார்.
இதை ஏற்காமல் திருமண ஏற்பாடு நடைபெற்றது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற பெற்றோர் வீட்டில் மகன் தூக்கிட்டு மகன் சடலமாக தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.