கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர விபத்து.. தூக்கி வீசப்பட்ட 3 இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.!

Published : Oct 24, 2023, 11:42 AM ISTUpdated : Oct 24, 2023, 11:44 AM IST
கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர விபத்து.. தூக்கி வீசப்பட்ட 3 இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.!

சுருக்கம்

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா கோட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவியின் மகன் வினோத் (19). ராஜூ மகன் ராம் (20), செல்வராஜ் மகன் ஆனந்த் (22) ஆகியோர் நண்பர்கள். ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேரும் நேற்றி இரவு பெரம்பலூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். 

பெரம்பலூர் அருகே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா கோட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவியின் மகன் வினோத் (19). ராஜூ மகன் ராம் (20), செல்வராஜ் மகன் ஆனந்த் (22) ஆகியோர் நண்பர்கள். ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேரும் நேற்றி இரவு பெரம்பலூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். 

இதையும் படிங்க;- ஆவடியில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு! ரயில் சேவை பாதிப்பு!

அப்போது கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் வினோத், ராம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆனந்த் ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து, 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஆம்னி பேருந்துக்கு போட்டியாக களம் இறங்கும் அரசு சொகுசு பேருந்துகள்; கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் தகவல்
உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் தாயின் உடலுக்கு பூஜை செய்த மகன்? தோல்வியில் முடிந்தததால் மகன் விபரீத முடிவு