அடேங்கப்பா! அருண் நேருவின் சொத்து மதிப்பு இவ்வளவா! வேட்புமனுவில் வெளியான விவரங்கள்!

By SG Balan  |  First Published Mar 25, 2024, 5:34 PM IST

பெரம்பலூரில் திமுக வேட்பாளர் அருண் நேரு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அரது பிரமாணப் பத்திரத்தில் அருண் நேருவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் முன்னிட்டு வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. மீதம் உள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பங்கிட்டுக் கொண்டிருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டிருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேருவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அவரை எதிர்த்து அதிமுகவின் சந்திரமோகன், பாஜக கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் களத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா போல புதுசா படையெடுக்கும் பெருந்தொற்று... எச்சரிக்கும் தொற்றுநோய் வல்லுநர்கள்!

இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருண் நேரு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி கற்பகத்தைச் சந்தித்து தனது வேட்புமனுவை வழங்கினார். வேட்புமனுவுடன் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் அருண் நேருவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

அருண் நேரு சொத்து மதிப்பு எவ்வளவு?:

அருண் நேரு தாக்கல் செய்துள்ள பிராமணப் பத்திரத்தின்படி, அவர் பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.46.20 கோடி. இதில் கையிருப்பில் உள்ள ரொக்கப் பணம் ரூ.2.14 லட்சம். அருண் நேரு பெயரில் 7 வங்கிக் கணக்குகள் உள்ளன. ரூ.27.11 கோடி பணத்தை பல வகைகளில் முதலீடு செய்துள்ளார். சுமார் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 480 கிராம் தங்கமும் வைத்திருக்கிறார்.

அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.29.06 கோடி ஆகும். திருச்சியில் தில்லை நகரிலும் ஶ்ரீரங்கத்திலும் ஒரு வீடு உள்ளது. சென்னையில் மயிலாப்பூர் மற்றும் அடையார் பகுதிகளிலும் இரண்டு வீடுகள் உள்ளன. திருச்சியில் மூன்று இடங்களில் சுமார் 10 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. லால்குடி விவசாயப் பயன்பாடு இல்லாத 18,872 சதுர அடி பரப்புள்ள நிலமும் உள்ளது.

அவரது மனைவி தீபிகா பெயரிலும் இதே அளவுக்குத் தங்கம் உள்ளது. மனைவி வசம் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.83.47 லட்சம். ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம் கையிருப்பில் உள்ளது. சென்னை தாம்பரத்தில் தீபிகா பெயரில் ஒரு வீடும் உள்ளது. 

ஏ டூ இசட் நான் தான்... பிரளயத்தை ஏற்படுத்துவேன்... இது நடிகர் மன்சூர் அலிகான் கேரண்டி

click me!