பள்ளி கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் 3 மாதத்திற்குள் நிரப்பப்படும்... அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி!!

By Narendran SFirst Published Oct 27, 2022, 9:30 PM IST
Highlights

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் 3 மாதத்திற்குள் படிப்படியாக நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் 3 மாதத்திற்குள் படிப்படியாக நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள மாவனல்லா, கூடலூர் பகுதிகளில் உள்ள அரசு உண்டு உறை விட பள்ளி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீடீர் ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை பிரிக்ஸ் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: இஸ்லாமிய மத குருவிடம் தீவிர விசாரணை… அவரது வீட்டை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு!!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் பொது பணித்துறை மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித்துறைக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 1500 கோடி ரூபாயை  முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்.

இதையும் படிங்க: விரைவில் என்.ஐ.ஏ கையில் கோவை கார் வெடிப்பு வழக்கு… டி.ஜி.பி சைலேந்திரபாபு தகவல்!!

தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 3 மாதத்திற்குள் படிப்படியாக நிரப்பப்படும். தற்போது 3200  பேர்களுக்கு  முதுநிலை ஆசிரியர்கள் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பினால் அனுபவம் வாய்ந்த முதுநிலை ஆசிரியர்கள் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது என்பதை உயர் நீதிமன்றத்திற்கு தமிழக அரசு சார்பில் விரிவான பிரமாண பத்திரம்   சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார். 

click me!