2 புலிகள் உயிரிழந்த விவகாரம்; அப்பாவி நபர் பொய்யாக கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் போராட்டம்

By Velmurugan s  |  First Published Sep 15, 2023, 12:45 PM IST

உதகை அருகே மர்மமான முறையில் 2 புலிகள் உயிரிழந்த விவகாரத்தில் அப்பாவி நபர் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கிராம மக்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


உதகை அருகே எமரால்டு பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக மர்மமான முறையில் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு புலியும், எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு புலி என இரண்டு புலிகள் உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் 20 பேர் கொண்ட குழுவைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Latest Videos

undefined

புலிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி ஒரு புலி விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் இறந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் புலி தாக்கிக் கொன்ற மாட்டின் மீது விஷம் தடவி பலியை கொன்றதாக வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை ஊழல் அமைச்சரவையாக உள்ளது - அண்ணாமலை விமர்சனம்

இந்த விவகாரத்தில் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சேகர் என்பவர் அப்பாவி எனவும், அவரிடம் மாடு எதுவும் இல்லை என்றும் கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் உதகையில் உள்ள மாவட்ட வன அலுவலகம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.

சேகர் என்பவர் எந்த தவறும் செய்யவில்லை. அவர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தனிக் குழு அமைத்து குற்றவாளியை கண்டுபிடித்து பொய்யாக கைது செய்யப்பட்டுள்ள நபரை விடுதலை செய்ய வேண்டும் என கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சீல்; இந்து அமைப்பினர் வாக்குவாதம்

இதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஊட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!