பிரமரின் வருகையை முன்னிட்டு மசனகுடியில் ஹெலிகாப்டர் ஒத்திகை

By Velmurugan s  |  First Published Apr 7, 2023, 9:04 PM IST

பிரதமர் நரேந்திர மோடி முதுமலை வருவதை முன்னிட்டு மசனகுடி பகுதியில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டது,


நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக 30 வது ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொள்ள  உள்ளார். பிரதமர் வரவுள்ள நிலையில் தி எலிபன்ட் விஸ்பாரஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் பெள்ளி ஆகியோரை சந்திக்கும் விதமாகவும் வருகை தர உள்ளார்,

இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் இறங்க உள்ள மசனகுடி பகுதியில் இன்று ஒத்திகை நடத்தப்பட்டது மேலும் கர்நாடகா கேரளா நீலகிரி மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் 2000 திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்,

Tap to resize

Latest Videos

மேலும் நாளை மாலை 4 மணி முதல் முதுமலை கக்கன் நல்லா  சாலை மூடப்படுவதாகவும் மேலும் முதுமலை தெப்பக்காடு மசனகுடி பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, பின்பு தெப்பக்காடு விழாவில் நரேந்திர மோடி கலந்து கொண்ட பிறகு ஹெலிகாப்டர் மூலம் மைசூர் செல்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்

click me!