மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில் கட்ட பூமி பூஜையை நடத்தி இருக்கின்றனர் ராசிபுரம் அருகே இருக்கும் குச்சிக்காடு கிராம மக்கள் .
தமிழகத்தின் முதல்வராக 5 முறையும் திமுக தலைவராக 50 ஆண்டுகளும் இருந்தவர் மறைந்த மு.கருணாநிதி . வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி தனது 94 ம் வயதில் மரணமடைந்தார் . பெரியாரின் கருத்துக்களை ஆழமாக உள்வாங்கி செயல்பட்ட கருணாநிதி காலம் முழுவதும் தீவிர பகுத்தறிவுவாதியாக செயல்பட்டார் .
undefined
இவரது ஆட்சி காலத்தில் தான் அருந்ததிய இன மக்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டார் . மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டமும் இவர் முதல்வராக இருந்த போது கொண்டு வரப்பட்டது தான் .
இந்த நிலையில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில்கட்ட குச்சிக்காடு கிராம மக்கள் முடிவு செய்தனர் . அவரது ஆட்சி காலத்தில் அருந்ததியர் இன மக்களுக்கு அளித்த இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் கோவில் கட்ட இருப்பதாக தெரிவித்தனர் .
இதற்கான பூமி பூஜை நடத்தும் விழா நடைபெற்றது .கிராம மக்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர் . குச்சிக்காடு கிராமத்தை சேர்ந்த 10 பேர் சேர்ந்து சுமார் 30 லட்சம் செலவில் கருணாநிதிக்கு கோவில் கட்ட இருக்கின்றனர் .
காலமெல்லாம் பகுத்தறிவுவாதியாக திகழ்ந்தவருக்கே கோவில் கட்டி வழிபாடு நடக்க இருக்கிறதா என அரசியல் வல்லுநர்கள் பேசி வருகின்றனர் .