நாமக்கல் மாவட்டம் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராசப்பன், விவசாயியான இவரது நில பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பட்டாவில் உள்ள கோவில் சாமிகளின் பெயர்களை நீக்கி தனி பட்டா வழங்க பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத காரணத்தால் நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு, பரமத்தி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராசப்பன், விவசாயியான இவரது நில பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பட்டாவில் உள்ள கோவில் சாமிகளின் பெயர்களை நீக்கி தனி பட்டா வழங்க பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிங்க;- பழனிசாமியும், ஸ்டாலினும் இவர்களிடம் மன்னிப்பு கேட்கணும... அதிமுக, திமுகவை நாறடித்த அமமுக..!
இதுகுறித்த உத்தரவு நாமக்கல் மாவட்ட ஆட்சியர், பரமத்தி வேலூர் வட்டாட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் நீக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால், ரசப்பன் மீண்டும் பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க;- 4 நாளில் முடிந்து போன திருமண வாழ்க்கை.. கார் விபத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த புதுமண தம்பதி..!
இது தொடர்பான விசாரணையில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியரைக் கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை.. விதவையான 9 மாத கர்ப்பிணி மகள்.!