பள்ளி திறந்த 3 நாட்களில் அதிர்ச்சி.. 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு..!

By vinoth kumarFirst Published Sep 3, 2021, 12:26 PM IST
Highlights

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இதுவரை ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து நேற்று முன்தினம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

நாமக்கல் மாணிக்கம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இதுவரை ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து நேற்று முன்தினம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும், வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. பள்ளி வளாகங்களிலும் முழுமையான சுத்தமாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில், பள்ளிகள் திறந்து 3 நாட்களே ஆன நிலையில், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே கடலூரில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!