தருமபுர ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் மரணம்..!

By Manikandan S R SFirst Published Dec 4, 2019, 4:37 PM IST
Highlights

உடல்நலக்குறைவு காரணமாக தருமபுர ஆதினம் இயற்கை எய்தினார்.

நாட்டின் பழமையான சைவ மடங்களில் ஒன்று தருமபுரம் ஆதீன மடமாகும். மயிலாடுதுறையில் அமைந்திருக்கும் இம்மடத்தின் ஆதீனமாக 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்(96) இருந்து வந்தார். தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 27 சிவாலயங்கள் இருந்து வருகின்றன.

இதனிடையே வயது மூப்பு காரணமாக 26 வது குருமகா சன்னிதானம் ஓய்வில் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் தஞ்சாவூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 2 .40 மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு ஆதீன மடத்தின் நடைமுறைகள்படி இறுதிச்சடங்குகள் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆதீனத்தின் மறைவு செய்தி கேட்டு பக்தர்கள் பலர் மடத்தின் முன்பாக திரள தொடங்கியுள்ளனர்.

click me!