வேளாங்கண்ணி கடல் அலையில் சிக்கிய 3 மாணவர்கள்; கரை ஒதுங்கிய இரு உடல்கள்

By Velmurugan s  |  First Published Aug 11, 2024, 9:55 PM IST

சிலம்பப் போட்டியில் பங்கேற்பதற்காக வேளாங்கண்ணி வந்த பள்ளி மாணவர்களில் இருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு.


நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. அதில் பங்கு பெறுவதற்காக திண்டுக்கல்லில் இருந்து 45 மாணவ, மாணவியர் வந்திருந்தனர். இந்த நிலையில் மதியம் போட்டியை முடித்துவிட்டு 13 மாணவர்கள் வேளாங்கண்ணி சுற்றுலா தளத்தை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். 

ஆற்றில் விழுந்த ஒருவரை காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து பறிபோன 7 உயிர்கள்; சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்

Tap to resize

Latest Videos

undefined

அப்போது மாணவர்கள் கடலில் குளித்த நிலையில் 3 மாணவர்கள் கடல் அலையில் அடித்து செல்லவே சக மாணவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இந்த நிலையில் பேரூராட்சி கடல் மீட்பு குழுவினர் மற்றும் இளைஞர்கள் கடல் அலையில் சிக்கிய ஒரு சிறுவனை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இரண்டு மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட போது திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார் பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் இறந்த நிலையில் கரை ஒதுங்கினார்.

கனமழை எதிரொலி; விழுப்புரத்தில் சிறுமியின் பார்வையை பறித்த மின்னல்

மேலும் காணாமல் போன ஒரு மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கன்னிக்கோவில் அருகே 13 வயதான வீரமலை என்ற மாணவன் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளான். இருவர் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அருகே சிலம்பப் போட்டியில் பங்கேற்க வருகை தந்த மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!