அவன் கூட பழகாதனு சொன்னா கேக்க மாட்டியா? சகோதரியை கொன்று தொங்விட்ட அண்ணன் - மதுரையில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Aug 7, 2024, 5:50 PM IST

மதுரையில் சகோதரியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தங்கையை கொன்று தூக்கில் தொங்கவிட்ட நபர் தலைமறைவு.


மதுரை மாவட்டம் கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இருக்கு தமிழ்ராஜ் (வயது 41) என்ற மகனும், திலகவதி (32) என்ற மகளும் இருந்தனர். தமிழ்ராஜ் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவந்தார். திலகவதிக்கு கண்ணன் என்பவருடன் திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே கண்ணன் இராணுவத்தில் பணியாற்றிவரும் நிலையில், திலகவதிக்கு ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவருடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! நிலுவையில் உள்ள மொத்த சம்பளத்தையும் வழங்க உத்தரவு

Latest Videos

இந்த விவகாரம் சகோதரர் தமிழ்ராஜ்க்கு தெரியவரவே திலகவதியை கண்டித்துள்ளார். மேலும் ராகவேந்திரன் உடனான தொடர்பை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறும் கராராக தெரிவித்துள்ளார். ஆனால், இதனை பொருட்படுத்தாத திலகவதி தனது உறவை தொடர்ந்துள்ளார். 

Armstrong murder : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.! காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமன் கைது - யார் இவர்.?

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திலகவதி, தமிழ்ராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், திலகவதியை கடுமையாக தாக்கிய தமிழ்ராஜ் அவரது கழுத்தில் கயிற்றை இறுக்கில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு திலகவதி துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கீரைத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!