தாலி கட்டிய கணவர் என்று கூட பாராமல் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி.. எந்த இடத்தில் தெரியுமா?

Published : Jul 12, 2024, 04:47 PM ISTUpdated : Jul 12, 2024, 04:51 PM IST
தாலி கட்டிய கணவர் என்று கூட பாராமல் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி.. எந்த இடத்தில் தெரியுமா?

சுருக்கம்

மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி அடுத்துள்ள வெள்ளியங்குன்றம் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மாலதி (28). இவர் ஜூஸ் கடையில் வேலை செய்து வந்தார். இவர் வேலைக்கு செல்வது கணவருக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். 

வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரத்தில் கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது மனைவி ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி அடுத்துள்ள வெள்ளியங்குன்றம் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மாலதி (28). இவர் ஜூஸ் கடையில் வேலை செய்து வந்தார். இவர் வேலைக்கு செல்வது கணவருக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: Tamilnadu Heavy Rain: தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் இன்று மழை போட்டுதாக்குப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட்!

ஆனால் அதை கேட்காமல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் இது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மாலதி தாலி கட்டிய கணவர் என்று கூட பாராமல் கொதிக்கும் எண்ணெயை எடுத்து மேலே ஊற்றியுள்ளார்.  

இதையும் படிங்க: Armstrong : 10 நாட்களாக நோட்டம்! ஒயின் ஷாப்பில் ரூட்! 45 நிமிடங்கள்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பகீர் தகவல்!

இதில், செந்தில்குமார் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இவரதுது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!