தமிழகத்தில் கொலை, கொள்ளை செய்தி வராத நாளே இல்லை; முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை காட்டம்

By Velmurugan s  |  First Published Jul 12, 2024, 2:02 PM IST

மதுரையில் 70 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழக காவல்துறை, அரசுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளள சமூக வலைதளப்பதிவில், “மதுரையில் தொடர்ந்து வயது முதிர்ந்த பெண்களைக் குறிவைத்துக் கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று வயதான தாய்மார்கள் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் 70 வயதான திருமதி. முத்துலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்புகிறது. 

மரக்காணத்தில் கடலில் கரை ஒதுங்கிய 2 சிறுமிகளின் உடல்கள்; குடும்ப பிரச்சினையால் குழந்தைகள் கொலை? 

Tap to resize

Latest Videos

கொலை, கொள்ளை என்று செய்தி வராத நாளே இல்லை என்ற அளவுக்கு, தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகக் காவல்துறையினரை, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். 

திமுக அரசு என்னை கொலை செய்ய பார்க்கிறது; நீதிமன்ற வாசலில் சாட்டை துரைமுருகன் குமுறல்

ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழகக் காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும். பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை உணர்ந்து, உடனடியாக சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!