கிடுகிடுவென உயரும் வைகை அணையின் நீர்மட்டம் !! முல்லைப்பெரியாறு அணை திறப்பு .. விவசாயிகள் மகிழ்ச்சி ..

By Asianet Tamil  |  First Published Aug 19, 2019, 3:46 PM IST

முல்லைப்பெரியாறு அணை திறக்கப்பட்டுள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது .


மதுரை மற்றும் அதனை சுற்றி இருக்கும் தென்மாவட்டங்களின் நீர்த்தேவைகைளை பூர்த்தி செய்து வருவது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருக்கும் வைகை அணையாகும் . தற்போது அங்கு நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது .

Tap to resize

Latest Videos

அதே நேரத்தில் கேரளா மாநிலத்திலும் மழை பெய்து வருவதால் , முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்  பட்டுள்ளது . இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 1500  கன அடியாக உயர்ந்துள்ளது .

29 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் , முல்லை பெரியாறு அணையில் இருந்து வரும் நீரால் கிடுகிடுவென உயர்ந்து 46 அடியாக ஏறியுள்ளது .  இது இன்னமும் உயரும் என்று எதிர்பார்க்கப்  படுகிறது .அணையில் இருந்து 60 கன அடி நீர் திறக்கப் பட்டுள்ளது ..

வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் .

click me!