30 ஆண்டுகால பயணம்; பேருந்தை கட்டியணைத்தபடி கண்ணீருடன் விடை பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர்

By Velmurugan s  |  First Published Jun 1, 2023, 1:35 PM IST

30 ஆண்டுகளாக புன்னகையுடன் அரசு பேருந்து ஒட்டிய ஒட்டுநர்., ஒய்வு நாளில் பிரியமனமில்லாமல் பேருந்தை கட்டியணைத்து அழுத வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.


அரசின் பல்வேறு துறையில் பணியாற்றிய ஊழியர்கள் 60 வயது எட்டிய காரணத்தினால் இன்று அதிகமானோர் பணி ஓய்வு பெற்றனர். இந்தநிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் 30 ஆண்டுகளாக பணியாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர் பைக்காராவை சேர்ந்த முத்துப்பாண்டி. 

Tap to resize

Latest Videos

undefined

இவர் தனது ஓட்டுநர் பணி இன்றுடன் ஓய்வு பெறுவதன் காரணமாக தான் இத்தனை ஆண்டுகளாக பொதுமக்களை ஏற்றிக்கொண்டு ஓட்டி வந்த அரசு பேருந்தை தான் பணி ஓய்வு பெரும் நாளில் இயக்கி கடைசியாக அதனை வணங்கி முத்தமிட்டு அரசு பேருந்தை கட்டித் தழுவி கண்ணீர் ததும்ப அரசு பேருந்து மூலம் தன் வாழ்வில் பெற்ற திருமணம்., சமூகத்தில் மதிப்பு., கிடைத்த பயன்களை எடுத்துக் கூறி மகிழ்ச்சியுடன் பணி ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். மேலும்., ஓய்வுபெருவதுடன் சக ஊழியர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து பேசிய காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணமான ஒரே மாதத்தில் காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொன்ற கணவன்; பெண் வீட்டார் கதறல் 

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இன்று பணி ஓய்வு பெற்ற முத்துப்பாண்டி மதுரை திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில் திருப்பரங்குன்றம் வழியாக அனுப்பானடி மற்றும் மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்து வழித்தட எண் 31-A பேருந்தை இயக்கியது இன்று கடைசி நாள் என்பதால் தான் ஓட்டிய அரசு பேருந்தை கட்டித்தழுவி முத்தமிட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கன்னியாகுமரியில் தவறி விழுந்த பெண் மீது ஏறி இறங்கிய பேருந்து; மகன் கண் முன்னே பலியான தாய்

click me!