கோவில் யானைக்கு பிடித்த மதம்.. திருப்பரங்குன்றம் கோவிலில் பரிதாபமாக உயிரிழந்த பாகன்

By karthikeyan V  |  First Published May 24, 2020, 8:34 PM IST

திருப்பரங்குன்றம் கோவில் யானைக்கு மதம் பிடித்து, பாகனை தாக்கியதில் பாகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


பிரசித்தி பெற்ற பெரிய கோவில்களில், கோவில் யானைகள் வளர்க்கப்படுகின்றன. கோவில் யானைகளில் தான் விழாக்களின்போது, சாமி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும். அதுமட்டுமல்லாமல் லக்‌ஷ்மி கடாட்சத்திற்காகவும் கோவில்களில் யானை மற்றும் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. 

பழக்கப்படுத்தப்பட்ட சாதுவான கோவில் யானையாக இருந்தாலும், அது யானைதானே.. யானைகளுக்கு மதம் பிடிப்பது இயல்பு. அதில் கோவில் யானை, காட்டு யானை என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. 

Tap to resize

Latest Videos

கோவில் யானைகளுக்கு மதம்பிடித்து பாகனை தாக்கும் சம்பவங்கல் ஏற்கனவே பலமுறை நடந்துள்ளன. அந்தவகையில், மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரயமணியன் சுவாமி கோவிலின் கோவில் யானை, மதம்பிடித்து பாகனை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். 

கோவில் யானையை குளிக்கவைக்க அழைத்துச்சென்றபோது, யானை தாக்கி பாகன் காளிதாஸ் உயிரிழந்தார். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், பாகன் காளிதாஸ் உடலை மீட்டனர். இந்த சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!