தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை (62) போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை (62) போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அந்த மாணவி, தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக பேசிய வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதனை பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்தது.
undefined
இதையடுத்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பிரேத பரிசோதனை முடிந்தும் மாணவியின் உடலை வாங்க மறுத்து மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவியின் பெற்றோரும், பாஜகவினரும் போராட்டம் நடத்தினர். பின்னர், மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.