பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் சில்லக்குடியில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடியில் வரும் திங்கட்கிழமை அன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது. கொரோனா அதிகரித்து வருவதால் சில்லக்குடியில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி ரத்து என அறிவித்துள்ளது.ஏற்கனவே கடந்த ஆண்டு சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி ரத்தான நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, இந்த ஆண்டு கொரோனா கட்டுபாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்னும் சற்று நேரத்தில் நிறைவு பெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி 150 பார்வையாளர்கள் மட்டுமே போட்டியை காண அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ஒரு சுற்றுக்கு 75 முதல் 100 வீரர்கள் அனுமதிக்கப்படுவர்.
undefined
ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் போட்டியில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவசரகால மருத்துவ தேவைக்காக 10 மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
சிறந்த காளைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி சார்பில் மோட்டார் சைக்கிளும் வழங்கப்படவுள்ளது.தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர் ,குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரைக்கும் 17 காளைகள் மேல் அடக்கிய வலையங்குளம் முருகன் முதலிடத்திலும் (39 டீசர்ட் எண்) அவனியாபுரம் கார்த்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்போது 59 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 26 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 22 பேரும், பார்வையாளர்கள் 11 பேரும் பாதிக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக 17 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாடு வெளியேறும் இடத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த 18 வயது இளைஞன் பாலமுருகன் என்பவரை மாடு மார்பில் குத்தியதில் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார்.