தீபாவளியை ஒட்டி நான்கு நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு..! அதிர்ச்சியில் குடிமகன்கள்..!

Published : Oct 25, 2019, 04:33 PM ISTUpdated : Oct 25, 2019, 04:42 PM IST
தீபாவளியை ஒட்டி நான்கு நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு..! அதிர்ச்சியில் குடிமகன்கள்..!

சுருக்கம்

மதுரை மாவட்டத்தில் வரும் 27 ம் தேதி முதல் 4 நாட்கள் மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 27ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதேபோன்று 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இருக்கும் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அவரது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அனைத்து மதுபான கடைகளையும் அடைக்க மாவட்ட உதவி ஆணையர்(கலால்) உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வாணிப கழகம் மூலம் நடத்தப்படும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், விடுதியுடன் கூடிய மது அருந்தகம், தேசிய மாணவர் படை அங்காடி, படை வீரர் கேண்டீன் ஆகியவை வருகிற 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை 4 நாட்கள் மூடப்பட இருக்கிறது.

மேற்கண்ட நாட்களில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி மதுவை பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீதி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒப்பந்தக்காரர் மனைவியோடு தொழிலாளி உல்லாசம்..! பீரில் விஷம் கலந்து கொடூர கொலை..!

PREV
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!