பாஜக பிரமுகரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்... கருவை கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி..!

By vinoth kumar  |  First Published Oct 18, 2019, 5:24 PM IST

உனக்கு அதிகம் மார்க் போடுறேன் என கூறி 22 வயது நர்ஸிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் அடைந்த பெண்ணின் கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. 


உனக்கு அதிகம் மார்க் போடுறேன் என கூறி 22 வயது நர்ஸிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் அடைந்த பெண்ணின் கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. 

சென்னை, துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் ஜெயராணி. இவர் சிவகங்கை அருகே பச்சேரியை பூர்வீகமாக கொண்டவர். இவரது மகனுக்கு சிவகங்கை அருகே மதுரை ரோட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுடன், கடந்த மாதம் 11-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து தம்பதி சென்னையில் வசித்து வந்தனர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் புது மணப்பெண்ணுக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூன்றரை மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக மணப்பெண்ணிடம் விசாரித்த போது, சிவகங்கையில் மதுரை முக்கில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தபோது, நர்சிங் கல்லூரி உரிமையாளரும், முதல்வருமான சிவகுருதுரைராஜ் (61) தனக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது. அப்படி தெரிவித்தால் கொன்று விடுவேன் மிரட்டியால் யாரிடமும் இதை தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார். 

இதுதொடர்பான புகாரின்பேரில், சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சிவகுரு துரைராஜை கைது செய்தனர். இந்நிலையில், தனது கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி, அந்தப்பெண், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம்.கோவிந்தராஜ், அந்தப் பெண்ணின் கருவை கலைக்க அனுமதியளித்து உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

click me!