புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோவிலின் குடமுழுக்கை நடத்துவதற்கு தொல்லியல் துறையில் முறையான அனுமதி பெறப்படவில்லை என மனு தாக்கலாகியிருக்கிறது.
தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு தடைகேட்டு வழக்கறிஞர் சரவணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தொடர்பான மனுக்கள் அனைத்தும் நாளை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. கோவில் குடமுழுக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஆகம முறைப்படி சமஸ்கிருதத்தில் தான் நடத்த வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோவிலின் குடமுழுக்கை நடத்துவதற்கு தொல்லியல் துறையில் முறையான அனுமதி பெறப்படவில்லை என மனு தாக்கலாகியிருக்கிறது.
Also Read: கம்பீரமாய் வந்த அய்யனார்..! தமிழ்ச் சமூகத்தின் காவல் தெய்வத்தை பெருமைபடுத்திய மோடி அரசு..!