பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை... அலறியடித்து ஓடிய மாணவர்கள்..!

Published : Sep 06, 2019, 11:08 AM IST
பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை... அலறியடித்து ஓடிய மாணவர்கள்..!

சுருக்கம்

பள்ளி வகுப்பறையில் 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பள்ளி வகுப்பறையில் 11-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை கே.புதூரை அடுத்துள்ளது காந்திபுரம். அந்த பகுதியைச் சேர்ந்தவர் முத்து, கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி. இவர்களது 2-வது மகள் அர்ச்சனா (16). புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் இன்று காலை 8 மணியளவில் பள்ளிக்கு அர்ச்சனா சென்றார். வகுப்பறைக்குள் சென்ற அவர் வீட்டில் இருந்து எடுத்து வந்த சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனை கண்ட சகமாணவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு வராத மாணவி, இன்று தான் பள்ளிக்கு வந்துள்ளதால் வீட்டில் ஏதாவது பிரச்சனை இருந்திருக்கலாம் என பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!