சீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை!

Published : Oct 13, 2019, 09:46 PM IST
சீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை!

சுருக்கம்

சீன அதிபர் தமிழகம் வந்து சென்ற பிறகு சிறு வியாபரிகள் மத்தியில் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த வருகையின் மூலம் சீனப் பொருட்களின் ஆதிக்கம் அதிகரிக்குமோ என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்திருக்கிறது. 

சீன அதிபர் தமிழகம் வந்து சென்ற பிறகு சிறு வியாபரிகள் மத்தியில் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
மதுரையில் அப்பளம், வடகம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 7-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.


அப்போது அவர், “சாமனிய மக்கள் அப்பளம், வடகம் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீது கடுமையான ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வேண்டும்.


சீன அதிபர் தமிழகம் வந்து சென்ற பிறகு சிறு வியாபரிகள் மத்தியில் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த வருகையின் மூலம் சீனப் பொருட்களின் ஆதிக்கம் அதிகரிக்குமோ என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்திருக்கிறது. எனவே இது குறித்து வியாபாரிகளிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி விளக்க வேண்டும்.

PREV
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!