திமுக கவுன்சிலரின் உணவகமாக மாறிய அம்மா உணவகம்.. பூரி, வடை, ஆம்லெட் ஜோராக விற்பனை.!

By vinoth kumar  |  First Published May 24, 2022, 8:16 AM IST

ஏழை, எளியோரின் பசியை போக்கும் வகையில் கடந்த 2013ஆம் ஆண்டு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அம்மா உணவகம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.


மதுரையில் அம்மா உணவகத்தில் தனியார் உணவகம் போல் மாற்றி பூரி, வடை, ஆம்லேட் உள்ளிட்டவைகள் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஏழை, எளியோரின் பசியை போக்கும் வகையில் கடந்த 2013ஆம் ஆண்டு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அம்மா உணவகம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து அம்மா உணவகம் செயல்படுமா என்று கேள்வி எழுந்த நிலையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று அரசு அறிவித்தது. இருப்பினும், அம்மா உணவகங்கள் முன்புபோல முறையாக செயல்படவில்லை என்று புகார்கள் தொடர்ந்து வருகின்றது. 

Latest Videos

undefined

இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் 12 அம்மா உணவகங்கள் உள்ளன. அதில் ஒன்றான மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதித்துள்ள ரூ. 1-க்கு விற்பனை செய்யக்கூடிய இட்லி மற்றும் ரூ. 5-க்கு விற்பனை செய்யக்கூடிய பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லெட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போன்று பல்வேறு வகையான உணவுகளை வழங்கி வருகின்றனர். இதேபோல், மதிய வேளைகளிலும் ரசம், மோர், ஆம்லெட் என அனுமதிக்கப்பட்ட சாதத்தோடு சேர்த்து விற்பனை செய்து வருகின்றனர்.

அம்மா உணவகத்திற்காக வழங்கப்படும் மாவு, சிலிண்டர் மற்றும் ஊழியர்களை தனக்கு பிடித்தவாறு உணவுகளை விற்பனை செய்ய வைத்து அதில் லாபம் ஈட்டுவதாகவும் நாள்தோறும் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை அம்மா உணவக ஊழியர்களிடம் பெற்றுக்கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது. ஏழை, எளியோரின் பசியைப் போக்க செயல்படுத்தப்பட்ட அம்மா உணவகத்தை திமுக கவுன்சிலர்கள் சிலர் தங்களுக்கு லாபம் ஈட்டும் உணவகமாக மாற்றியுள்ளனர்.

click me!