#BREAKING வைகையாற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழப்பு.. 10 பேர் காயம்..!

Published : Apr 16, 2022, 10:20 AM ISTUpdated : Apr 16, 2022, 10:22 AM IST
#BREAKING வைகையாற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழப்பு.. 10 பேர் காயம்..!

சுருக்கம்

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கடந்த 12-ம் தேதி பட்டாபிஷேகமும், 13-ம் தேதி திக்குவிஜயமும், நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது.

மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கியபோது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மதுரை சித்திரைத் திருவிழா

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கடந்த 12-ம் தேதி பட்டாபிஷேகமும், 13-ம் தேதி திக்குவிஜயமும், நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது.

வைகையாற்றில் கள்ளழகர் 

இந்நிலையில், சித்திரைப் பெருவிழாவின் இறுதி நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் விழா இன்று அதிகாலை நடைபெற்றது. ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இன்று காலை அழகர்  இறங்கினர். இதில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதால் அதை காண குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

2 பக்தர்கள் உயிரிழப்பு

இந்நிலையில், வைகையாற்றில் கள்ளழகர் இறங்கிய வைபவத்தை காண ஒரே நேரத்தில்  லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின்  உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!