பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..! தென்மாவட்ட மக்களுக்கு கொண்டாட்டம்..!

By Manikandan S R S  |  First Published Jan 8, 2020, 10:36 AM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. அதை குடும்பத்துடன் கொண்டாட சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் பெரும்திரளாக கிளம்பி செல்வார்கள். அந்த சமயத்தில் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதை சரி செய்வதற்காக சிறப்பு பேருந்துகளை ஒவ்வொரு வருடமும் அரசு அறிவிக்கும். அதே போல இந்த வருடமும் 30 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது. பேருந்துகள் மட்டுமின்றி ரயில்களில் கூட்டம் அலைமோதும். விரைவு ரயில்களுக்கான முன்பதிவு 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கி நிறைவடைந்து விட்டது. இந்தநிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லை,மதுரை,நாகர்கோயில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்ட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

சென்னை எழும்பூர்- நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(வண்டி எண்:82601), வரும் 10-ந்தேதி மாலை 6.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும். இதைப்போல் எழும்பூர்- நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(82607), வரும் 11-ந்தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.

தாம்பரம்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில்(82603), வரும் 12-ந்தேதி தாம்பரத்தில் இருந்து 7.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும். இதைப்போல் நெல்லை- தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06002), வரும் 11-ந்தேதி நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06004), வரும் 12-ந்தேதி நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். நெல்லை-தாம்பரம் சுவிதா சிறப்பு ரெயில் (82604), வரும் 18-ந்தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06075), வரும் 20-ந்தேதி காலை 11.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நள்ளிரவு 2 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவில்-தாம்பரம் சுவிதா ரெயில் (82606), வரும் 19-ந்தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

திருச்சி-எழும்பூர் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06026), வரும் 11-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 8.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும். நாகர்கோவில்-திருச்சி சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06006), வரும் 14-ந்தேதி காலை 10.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, அன்று மாலை 6 மணிக்கு திருச்சி சென்றடையும். தாம்பரம்-நாகர்கோவில் சுவிதா ரெயில்(82609), வரும் 13-ந்தேதி இரவு 7 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

click me!