தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி.. மணிப்பூருக்கு எத்தனை முறை சென்றுள்ளார்? முதல்வர் ஸ்டாலின் கேட்ட கேள்வி!

By Raghupati R  |  First Published Apr 9, 2024, 7:55 PM IST

திராவிட மாடல் அரசு கல்விக்கான திட்டங்களை பார்த்து பார்த்து உருவாக்குகிறது என்றும்,  தாய்வீட்டு சீராக மகளிர் உரிமைத்திட்டம் அமைந்துள்ளது என்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின் அவர், “மணிப்பூர் விவகாரத்தில் மௌனம் காத்த பிரதமருக்கு இப்போது பெண் உரிமை மீது அக்கறை வந்துள்ளது. திராவிட மாடல் அரசு கல்விக்கான திட்டங்களை பார்த்து பார்த்து உருவாக்குகிறது. தாய்வீட்டு சீராக மகளிர் உரிமைத்திட்டமாக அமைந்துள்ளது. தேர்தலுக்காக இத்தனை முறை மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். வன்முறையால் பற்றி எறிந்த மணிப்பூருக்கு எத்தனை முறை மோடி சென்றுள்ளார்? என்று கேள்வி எழுப்பினார். 

மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை. எந்த முகத்தோடு தமிழ்நாடு  வந்துள்ளார் பிரதமர்? தேர்தல் நேரம் மட்டும் மோடி வர தமிழ்நாட்டு என்ன சரணாலயமா..? இந்தியா கூட்டணியின் பிரதமர் இப்போதுள்ள பிரதமர் மோடி போல் கட்டாயம் இருக்க மாட்டார். நாங்கள் கட்டும் ஒரு ரூபாய் வரிக்கு, 29 பைசா மட்டும் திருப்பிக் கொடுத்து நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள்.
பேரிடர் நிதியைக்கூட கொடுக்காமல் நாங்கள் மக்களுக்கு கொடுத்த நிதிக்கு கூட, நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனைப் ‘பிச்சை’ என்று சொல்லி ஏளனம் பேச வைக்கிறார்கள்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த இலட்சணத்தில். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகிறது! தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் செய்யப்பட்ட நன்மைகள், திட்டங்களையும் பட்டியல் போட்டால், ஒரு நாள் முழுவதும் அந்தச் சாதனைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்க முடியும். சில சாதனைகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கிறேன். பிரதமர் அவர்களே! குறித்துக் கொள்ளுங்கள். ஐக்கிய நாடு முழுவதும் முற்போக்குக் கூட்டணி அரசில் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கல்விக் கடன்கள் வழங்கப்பட்டது.

65 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சிறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அன்னைத் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்தோம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைத்தோம். திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வோம். நமது டி.ஆர்.பாலு அவர்கள் ஒன்றிய அமைச்சராக இருந்த காலத்தில் மேம்பாலங்கள், சாலைகள் என்று 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய்க்குத் தமிழ்நாட்டிற்குத் திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றினோம். நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கப்பட்டது.

இன்னும் நிறைய இருக்கிறது. பிரதமர் மோடியால் இப்படி பட்டியல் போட முடியுமா? தேர்தல் சீசனுக்கு மட்டும் அவர் வருவதற்கு தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் அவருக்கு ஏன் இத்தனை வன்மம்? தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? நாங்கள் என்ன இரண்டாம் தரக் குடிமக்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? எப்படி உங்களால் ஓட்டு கேட்டு வர முடிகிறது? பெண் சக்தி குறித்து பேசும் மோடி டெல்லி மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் வடித்த போது எங்கே போனார்..? என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

IRCTC Tour: கம்மி பட்ஜெட்டில் சுவிட்சர்லாந்து முதல் பிரான்ஸ் வரை ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டுமா?

click me!