வெளிநாடு செல்லாத தமிழருக்கும் வந்தது கொரோனா..! உஷார் மக்களே..!

By Manikandan S R SFirst Published Mar 24, 2020, 8:09 AM IST
Highlights

வெளிநாட்டில் இருந்து வராமல் தமிழகத்தில் இருந்த ஒருவருக்கு முதல்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு தனிமைப்படுத்தியிருக்கிறது.

உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 433பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 9 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. 


நேற்று ஒரே நாளில்  3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வராமல் தமிழகத்தில் இருந்த ஒருவருக்கு முதல்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு தனிமைப்படுத்தியிருக்கிறது.  

அதே போல லண்டனில் இருந்து வந்த திருப்பூரை சேர்ந்த 25 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். தமிழகம் முழுவதும் 12519 பேர் கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, கோவை, புதுக்கோட்டை, கடலூர், நெல்லை, கன்னியாகுமரி, திருவாரூர் உட்பட 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!