தமிழகத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தென்மாவட்ட சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மொத்தமாக பலி எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. இதனால் உலக நாடுகள் பீதியில் உறைந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் 22ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இன்று காலையில் ஜெய்பூரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் மரணமடைந்ததை அடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
undefined
தமிழகத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தென்மாவட்ட சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மாதம்(ஏப்ரல்) 6, 13, 20-ந்தேதி இயக்கப்பட இருந்த சென்னை எழும்பூர்-தூத்துக்குடி(வண்டி எண்: 06003) சிறப்பு கட்டண ரெயில், ஏப்ரல் 7, 14-ந் தேதி தூத்துக்குடி-எழும்பூர்(82604) சுவிதா சிறப்பு ரெயில் மற்றும் 21-ந்தேதி இயக்கப்பட இருந்த தூத்துக்குடி-எழும்பூர்(06004) சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இந்தியாவில் 5வது கொரோனா பலி..! ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்தார்..!
இதேபோல் தாம்பரம்-நாகர்கோவில்(06005) இடையே 8, 15-ந்தேதி, நாகர்கோவில்-தாம்பரம்(06006) 9, 16-ந்தேதி, நெல்லை-தாம்பரம்(06036) 2, 9, 16-ந்தேதி, தாம்பரம்- நெல்லை(82615) 3-ந்தேதி மற்றும் தாம்பரம்- நெல்லை (06035) இடையே 10, 17-ந் தேதிகளில் இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், நாகர்கோவில்-தாம்பரம்(06064) 6, 19-ந் தேதி, நாகர்கோவில்-தாம்பரம்(82624) 12-ந்தேதி, தாம்பரம்-நாகர்கோவில்(06063) 3, 10-ந்தேதி, நெல்லை-எழும்பூர்(82602) ஏப்ரல் 5, 12-ந் தேதிகளில் இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது. இது தவிர பல்வேறு ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி..! உச்சகட்ட பதற்றத்தில் உலக நாடுகள்..!