கிலோ 160 ரூபாயை தொட்ட வெங்காயம்..! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

By Manikandan S R S  |  First Published Dec 20, 2019, 12:13 PM IST

வெங்காய விலை தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.


நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தாறுமாறாக வெங்காய விலை உயர்ந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என பல்வேறு தரப்பினரும் வெங்காயத்தை உபயோகப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். உணவகங்களிலும் விலை ஏற்றம் காரணமாக வெங்காயத்தை உரிமையாளர்கள் தவிர்த்தனர்.

Tap to resize

Latest Videos

வெங்காய தட்டுப்பாட்டை போக்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. அதன்பிறகு வெங்காய விலை சற்று குறையத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்தநிலையில் தற்போது மீண்டும் வெங்காய விலை உயரத்தொடங்கியுள்ளது. மானாமதுரையில் கடந்த சில நாட்களாக 80 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வெங்காயம், நேற்று 150 ரூபாய்க்கு விற்பனையானது. 

ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை தரத்திற்கு ஏற்றவாறு 160 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மீண்டும் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அதிகபட்சமாக கேரளாவில் 170 வரை வெங்காயம் விற்பனை ஆகிறது. ஜனவரியில் அண்டை மாநிலங்களில் அறுவடை நடந்த பிறகே விலை குறையத்தொடங்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

click me!