நத்தம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்

Published : Aug 04, 2023, 10:00 AM IST
நத்தம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்

சுருக்கம்

மதுரை மாவட்டம் நத்தம் அருகே டிராக்டர் மீது மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 55). இவர் தனது குடும்பத்துடன் அவரது காரில்  திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டு இன்று வீடு செல்வதற்காக மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது நத்தம் சேர்வீடு பிரிவு அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் பலமாக மோதியதி விபத்துக்குள்ளானது. 

விபத்துக்குள்ளான உடனே தலை குப்புற கார் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த கந்தசாமி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த அவரது மகன் சிவனேஷ் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் குழாய்களை பதிப்பதில் முறைகேடு; ஒப்பந்ததாரரை துரத்தியடித்த கிராம மக்கள்

காரில் பயணம் செய்த கந்தசாமியின் மனைவி கெஜலட்சுமி, மகள்கள் சுமதி, சித்ரா ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நத்தம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தனியார் கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை; காவல்துறை தீவிர விசாரணை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!