கல்லூரி பெண்களை தவறாக நடத்திய நிர்மலா தேவிக்கு ஜாமின்..!

By Thiraviaraj RMFirst Published Mar 12, 2019, 2:46 PM IST
Highlights

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில் சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவிக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில் சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவிக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 

பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நிர்மலாதேவிக்கு போதிய சட்ட உதவிகளை வழங்க முடியவில்லை என அவரது வழக்கறிஞர் சுகந்தி தெரிவித்தார். அப்போது, நிர்மலாதேவி வழக்கில், காவல்துறையின் விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், இவ்விவகாரத்தில் நீதிமன்றம் எந்த முடிவெடுத்தாலும் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்டறிந்த நீதிபதிகள், பேராசிரியை நிர்மலாதேவியின் மனநிலை மற்றும் அவரது வழக்கின் போக்கு குறித்து அறிந்து கொள்ள, இன்று அவரை ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். இந்நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு முன் வந்த விசாரணையில், உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டு. வழக்குக்கு இடையூறு ஏற்படும் நிலையில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். 11 மாதங்களுக்கு பிறகு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 

click me!