கனமழை எச்சரிக்கையிலும் ரயிலை துவக்கி வைத்த பிரதமர்; தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற எண்ணமோ? எம்.பி.வெங்கடேசன்

By Velmurugan s  |  First Published Dec 23, 2023, 1:47 PM IST

கனமழைக்கான எச்சரிக்கை 5 நாட்களுக்கு முன்னரே துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிடும் நிலையில், எச்சரிக்கையின் போது காசி தமிழ் சங்கமம் ரயிலை தொடங்கி வைத்தது ஏன் என எம்.பி.வெங்கடேசன் கேள்வி.


மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12 ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் நிதியமைச்சர். அப்படியென்றால் 17 மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச்சங்க இரயிலின் துவக்கவிழாவை பிரதமரே நடத்திவைத்தாரே எப்படி?  கொட்டும் பேய்மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி?

அன்றைய தினம் கடும்மழையால் தென்மாவட்டங்களில் பல இரயில்களை ரத்து செய்யமுடியாமல் போனதற்கு இவ்விழாவே காரணம் என இரயில்வே அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? வானிலையின் இவ்வளவுப் பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதும், ஶ்ரீவைகுண்டத்தில் அது சிக்கிக்கொண்டு பயணிகள் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு?

Latest Videos

undefined

ஏரி, குளங்களை சரிசெய்துகொள்ளுங்கள்; நகரம் தாங்காது - கோவைக்கு வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

தனது அரசின் கீழ் இயங்கும் வானிலை அறிக்கையை அறியாத பிரமதமரா? அல்லது என்னவானாலும் என்ன.. தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற மனநிலையா? நிதியமைச்சர் அவர்களே! மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று தாங்கள் சொன்ன திசைதிருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள். இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுபெறுங்கள்” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!