வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த மோடி பொம்மை… விலை என்ன தெரியுமா?

Published : Dec 15, 2022, 11:57 PM IST
வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்த மோடி பொம்மை… விலை என்ன தெரியுமா?

சுருக்கம்

மதுரையில் உள்ள கடை ஒன்றில் பிரதமர் மோடி போலவே செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

மதுரையில் உள்ள கடை ஒன்றில் பிரதமர் மோடி போலவே செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியார் கடை ஒன்றில் பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: விவசாயிகளை வஞ்சித்து வருவது வேதனை அளிக்கிறது… கவலை தெரிவிக்கும் பி.ஆர்.பாண்டியன் !!

மேலும் அங்குள்ள குழந்தைகள் செக்சனின் அவர்களுக்கான விளையாட்டு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களில் பல்வேறு வகைகளில் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பார்பி கேர்ள், புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்கள், ராணுவ வீரர்கள் போன்ற வித்தியாசமான பொம்மைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு... அருவியில் குளிக்க தடை விதித்தது வனத்துறை!!

அந்த வகையில் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடி போல உருவாக்கப்பட்ட பொம்மை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த பொம்மை 1,554 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மூன்று விதமான தலைப்பாகையுடன் கூடிய பொம்மைகள் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே வரவேற்பு பெற்று நல்ல விற்பனையாகி வருவதா விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்