100 நாள் வேலைகள் சரியாக நடப்பதில்லை... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து!!

By Narendran S  |  First Published Dec 14, 2022, 6:37 PM IST

தமிழகத்தில் 100 நாள் வேலை சரியாக நடப்பது இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் 100 நாள் வேலை சரியாக நடப்பது இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் அமலின் உள்ள நிலையில் இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் கிராமப்புரங்களில் உள்ள பொதுமக்களுக்கு 100 நாட்கள் கட்டாயம் வேலைவாய்ப்பு அளிக்கப்படுவது வழக்கம். இந்த திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு 75 சதவீதம் மத்திய அரசும், 25% மாநில அரசும் ஊதியம் வழங்குகிறது.

இதையும் படிங்க: மந்திரிசபை மாற்றமா? முடிசூட்டும் விழாவா? அதிமுக வலிமையோடு புது அவதாரம் எடுக்கும்- சசிகலா ஆவேசம்

Tap to resize

Latest Videos

undefined

இந்த திட்டத்தின் கீழ் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட  நீர்நிலைகள் தூய்மைபடுத்தும் பணிகள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு தனியார் நிலத்தில் வேலை பார்க்க செய்வதாகவும், தனியார் நிலத்தில் வேலை பார்க்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: அமைச்சராக பதவியேற்ற உதயநிதி..! முதலில் கையொப்பமிட்ட மூன்று முக்கிய கோப்புகள்..! என்ன தெரியுமா.?

இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, 100 நாள் வேலை திட்டத்தின் நடைமுறைகள் மற்றும் வழக்கு குறித்து ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுள்ளதோடு தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் வழக்கை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.   

click me!