என்னை மறுபடியும் பழைய மூர்த்தியா மாத்தீடாதீங்க; அதிகாரிகளின் செல்பாட்டால் அமைச்சர் ஆவேசம்

By Velmurugan sFirst Published Nov 22, 2023, 12:51 PM IST
Highlights

மதுரையில் அதிகாரிகளின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த அமைச்சர் மூர்த்தி மீண்டும் தன்னை பழைய மூர்த்தியாக மாற்றிவிட வேண்டாம் என்று அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை வளர்நகரில் ரு.99.10 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த பணியினை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த ரேசன் கடையை பார்வையிட்டார்.

10 ஆண்டுகளாக திறக்கப்படாததால் ஆவேசமடைந்த அமைச்சர் மூர்த்தி இதை பார்த்தா மக்கள் காரி துப்ப மாட்டாங்களா? என்ன வேலை பார்க்கிறாங்க. இப்படி புதர் மண்டி எலி, பாம்பு வசிக்கும் இடமா மாறி கிடக்கு. மக்களுக்கு என்ன என்ன செய்யனுமோ அதை செஞ்சா தான் ஓட்டு போடுவாங்க. என்று அங்கு வந்திருந்த அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் உடனே பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதில் உங்களுக்காக நான், கலெக்டர், கமிஷனர் வெயிட் பண்றோம் நீங்க உடனே இங்க வாங்க என்று கூறிவிட்டு 10 வருடத்திற்கு முன்னாள் கட்டிய கட்டிடம் எப்பவோ கட்டிய கட்டிடம் மாதிரி இருக்கு என்றார். மேலும் மின் வாரிய அதிகாரிக்கு‌ போன் செய்து இங்க லைப்ரரிக்கும், ரேஷன் கடைக்கும் ஒரு வருடமாக கொடுத்த கரண்டையும் கட் பண்ணிட்டீங்க என்ன செய்வீர்களோ தெரியாது இரண்டு நாளில் கரண்ட் கொடுத்து ஆகணும். உங்க ஆட்களை இங்க வந்து பார்க்கச் சொல்லுங்க.  என்னை பழைய மூர்த்தியாக மாற்றி விடாதீர்கள் என்றார்.

அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துநர், ஓட்டுநரை கற்களை வீசி தாக்கிய போதை ஆசாமிகள்

என்ன செய்யணும் தெரியல இப்படி இருந்தா மக்கள் எப்படி ஓட்டு போடுவாங்க.  அதிகாரிகளை வேண்டிய அதிகாரி,  வேண்டிய அதிகாரினு போட்டதால எனக்கு  கெடுதல் பண்ணிருவீங்க போல. வேண்டிய அதிகாரியை  நல்லது செய்ய தான் வைத்திருக்கோம். வேண்டாத அதிகாரியா இருந்தா? தெரியாத அதிகாரியா இருந்தா நான் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி இருப்பேன். வேண்டிய அதிகாரி என்பதால் ஒன்னும் பண்ண முடியல.  லைப்ரரி, ரேஷன் இரண்டுக்கும் ரெண்டு நாளில் கரண்ட் தரவில்லை என்றால் கடுமையாக கோபப்படுவேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், மதுரை மாநகராட்சி மேயர், மதுரை மாநகராட்சி ஆணையாளர், மண்டலத்தலைவர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

click me!