மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது மோதி சினிமா பாணியில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்! 5 பேர் பலி! நடந்தது என்ன?

Published : Apr 10, 2024, 10:45 AM ISTUpdated : Apr 10, 2024, 10:47 AM IST
மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது மோதி சினிமா பாணியில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்! 5 பேர் பலி! நடந்தது என்ன?

சுருக்கம்

மதுரையைச் சேர்ந்த கனகவேல் என்பவர் மனைவி கிருஷ்ணகுமாரி, குழந்தையுடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கொய்யாப்பழ வியாபாரி பாண்டி  இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார். 

திருமங்கலம் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மதுரையைச் சேர்ந்த கனகவேல் என்பவர் மனைவி கிருஷ்ணகுமாரி, குழந்தையுடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கொய்யாப்பழ வியாபாரி பாண்டி  இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார். 

இதையும் படிங்க: அந்த தாத்தா என்ன இப்படியெல்லாம் பண்ணாரு! தாயிடம் கதறிய மகள்! 67 கிழவனின் தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

அப்போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது கார் பயங்கர மோதி தடுப்புச்சுவரிலும் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கனகவேல், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்ளிட்ட 4 பேரும், கொய்யா வியாபாரி பாண்டி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையும் படிங்க:  தமிழகத்தை அதிர வைத்த குன்றத்தூர் அபிராமியை ஞாபகம் இருக்கா? தற்போதைய வழக்கின் நிலை என்ன? தீர்ப்பு எப்போது?

இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்தனர். 

PREV
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!