ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு! மதுரை மேயரின் கணவரையும் தூக்கிய போலீஸ்! அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்!

Published : Aug 12, 2025, 08:50 PM ISTUpdated : Aug 12, 2025, 09:15 PM IST
tamilnadu

சுருக்கம்

ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு தொடர்பாக மதுரை மேயரின் கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Madurai Mayor's Husband Arrested In Property Tax Scam Case: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் என்பவர் இன்று ஏற்கெனவே கைது செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் நடந்த மிகப்பெரும் வரி மோசடி

சென்னையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். பொன்வசந்த்தை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மதுரை சொத்து வரி முறைகேடு கடந்த 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நடந்திருந்தது. மதுரை மாநகராட்சியின் பெரிய வணிக வளாகங்கள் மற்றும் கட்டடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்ததன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.150 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று ஒரே நாளில் 2 பேர் கைது

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது படலம் ஆரம்பித்தது. அதாவது ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், மற்றும் சொத்து வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்பட மொத்தம் 13 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இன்று மட்டும் தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி ஆணையர் சுரேஷ் குமார், மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுக அரசுக்கு பின்னடைவு

ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருவது திமுக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 3வது பெரிய நகரமான மதுரையில் அதிகாரிகள் இந்த முறைகேட்ட்டில் ஈடுபட்டுள்ளது தேர்தலின்போது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தின்போது இந்த விவாகரத்தை கையில் எடுத்து மக்கள் மனதில் ஆழமாக பதிக்க ஆயத்தமாகி வருகின்றன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!