மதுரையில் ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு! மாநகராட்சி உதவி ஆணையரை தட்டித் தூக்கிய போலீஸ்!

Published : Aug 12, 2025, 07:01 PM IST
Madurai Corporation

சுருக்கம்

மதுரையில் ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு வழக்கில் தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tuticorin Assistant Commissioner Arrested For in rs150 crore property tax scam: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு நடந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த மெகா முறைகேடு, கடந்த 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது மாநகராட்சியின் சில மண்டலங்களில் உள்ள பெரிய வணிக வளாகங்கள் மற்றும் கட்டடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்ததன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.150 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரையில் ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு

இந்த வழக்கில் இதுவரை ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், மற்றும் சொத்து வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்பட மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் மதுரை மாநகராட்சியின் திமுகவை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள் இரு நிலைக்குழு தலைவர்கள் ஆகியோர் பதவியில் இருந்து விலகினார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் கைது

இந்த முறைகேடு வழக்கை நீதிமன்ற உத்தரவின்படி டி.ஐ.ஜி. அபினவ் குமார் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை குழு, பல மாநகராட்சி ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், ம்துரை சொத்து வரி முறைகேடு வழக்கில் தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.

சுரேஷ்குமார் எப்படி சிக்கினார்?

சுரேஷ்குமார் முறைகேடு நடந்த காலகட்டத்தில் மதுரையில் பணிபுரிந்ததும் சொத்து வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாரை மதுரை அழைத்து முழுமையாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த முறைகேடு வழக்கில் அடுத்தடுத்து முக்கிய அதிகாரிகள் கைதாகி வருவது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசின் நிர்வாக லட்சணம்

இதுதான் திமுக அரசின் நிர்வாக லட்சணம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ஆகியோர் தெரிவித்துள்ளார். நேர்மையான முறையில் விசாரணை நடக்க இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!