களவாணியாக மாறிய கலைவாணி.. குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மதுரை அறக்கட்டளைக்கு 2 முறை அரசு விருது..!

By vinoth kumar  |  First Published Jul 2, 2021, 11:40 AM IST

குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மதுரை இதயம் அறக்கட்டளைக்கு, கடந்த ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையால் இரண்டு முறை மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மதுரை இதயம் அறக்கட்டளைக்கு, கடந்த ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையால் இரண்டு முறை மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கிவந்த இதயம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் காப்பாகத்தில் இருந்து காய்ச்சல் என்று கூறி தாய்க்கு தெரியாமல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு வயது ஆண்  குழந்தை ஒன்று கொரோனாவால் உயிரிழந்ததாகவும் முறைப்படி ஆவணங்களை பெற்றுக்கொண்டு மயானத்தில் உடலை அடக்கம் செய்ததாகவும் உறவினர்களிடம் காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Videos

undefined

இது தொடர்பாக குழந்தையின் குடும்பத்தினர் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், மதுரையில் கடந்த சில நாட்களாக எந்த குழந்தையும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்தது. இதற்கிடையே இதயம் காப்பகத்தில் இருந்த 2 வயது பெண் குழந்தையும் காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து, விசாரணையில் ஒரு வயது ஆண் குழந்தையை நகைக்கடை உரிமையாளர் மற்றொரு குழந்தையை சில்வர் பட்டறை உரிமையாளருக்கு 5 லட்சத்திற்கும் விற்பனை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தல்லாகுளம் போலீசார் 2 குழந்தைகளையும் மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தை கடத்தல் வியாபாரத்திற்கு தலைவனாகச் செயல்பட்ட சிவகுமார் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவனது காதலியும் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளராக வலம் வந்த கலைவாணி, குழந்தை விற்பனை புரோக்கர் மதர்ஷா, ராஜா, செல்வி உள்ளிட்ட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.பின்னர், அந்த காப்பத்தை போலீசார் சீல் வைத்தனர்.

இதில், கலைவாணி என்பவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையால் "மாநில இளைஞர் விருது" வழங்கப்பட்டுள்ளது.இதே போல இந்த காப்பகத்தில் பணியாற்றிய அருண் என்பவருக்கும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அதே "மாநில இளைஞர் விருது" அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!