மலைக்க வைக்கும் கணக்கில் வராத சொத்துக்கள்... வசமாக சிக்கிய வேலம்மாள் குழுமம்..!

By vinoth kumar  |  First Published Jan 24, 2020, 2:26 PM IST

தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழுமம், சென்னை, காஞ்சிபுரம், தேனி, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தங்களது கிளைகளை நிறுவி உள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளி முதல் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் வரை இந்தக் குழுமத்திற்கு சொந்தமாக செயல்பட்டு வருகிறது.


வேலம்மாள் கல்விக் குழுமத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்றள்ளது. இதில், கணக்கில் வராத ரூ.400 கோடி சொத்து ஆவணங்களும், ரூ.2 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழுமம், சென்னை, காஞ்சிபுரம், தேனி, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தங்களது கிளைகளை நிறுவி உள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளி முதல் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் வரை இந்தக் குழுமத்திற்கு சொந்தமாக செயல்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/abusing-womens-software-engineering-arrested-q4lq3j

இந்நிலையில், மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடம் அதிகமாக டொனேஷன் வசூலித்தது, வரி ஏய்பு புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, சென்னை, மதுரை உள்பட 60-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். வேலம்மாள் குழுமத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக வேலம்மாள் கல்வி குழுமத்தின் வாகனங்களை சோதனை நடைபெற்றது. 

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.400 கோடி சொத்து ஆவணங்களும், ரூ.2 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வேலம்மாள் கல்வி குழுமம் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கைகட்டி நிற்கக் கூடிய அளவுக்கு செல்வாக்கு வாய்ந்தவர்தான் வேலம்மாள் கல்வி குழுமத்தின் தலைவர் முத்துராமலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!