வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பட்டாசு - களம் இறங்கிய மதுரையான்ஸ்.!

Published : Oct 23, 2022, 06:53 PM IST
வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பட்டாசு - களம் இறங்கிய மதுரையான்ஸ்.!

சுருக்கம்

வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பட்டாசு தயாரித்து அசத்தியுள்ளார்கள் மதுரைக்காரர்கள். 

போஸ்டர் முதல் பொறிகடலை வரை எல்லாத்திலும் மதுரைக் காரங்க வித்யாசம் காட்டுவதில் கெட்டிக்காரங்க. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசிலும் வித்தியாசம் காட்டியுள்ளனர்.

தீபாவளி பண்டிகை வருவதையொட்டி ஜவுளி வியாபாரம் முதல் நகை வியாபாரம் வரை விற்பனை சூடு பிடித்துள்ளது. அதே போல் தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசு விற்பனையும் தீவிரம் அடைந்துள்ளது.

இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!

ஆண்டுதோறும் வெவ்வேறு வகையான புதிய வகை பட்டாசுகள் சந்தைக்கு வருவது வாடிக்கையானது. இந்நிலையில் மதுரையில் வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பட்டாசு ஒன்று விற்பனைக்கு வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரவேற்பையும் பெற்றுள்ளது.

 மதுரையில் பரபரப்பாக காட்சியளிக்கும் தெற்கு ஆவணி மூலவீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்கம் மூலம் பூசப்பட்ட வெள்ளி பட்டாசு வகைகள் காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது இந்த தயாரிப்பை  பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்