மதுரை அருகே தாயை பார்க்க சென்ற மகளை தந்தை ஒருவர் கொடூரமாக தாக்கி இருக்கிறார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் அப்துல் சமது. இவரது மனைவி மும்தாஜ். இந்த தம்பதியினருக்கு அரப்புஸ்ரா என்கிற மகள் இருக்கிறார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு மும்தாஜ் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ஆனால் குழந்தைகளை அனுப்ப மறுத்து அப்துல் சமது தன்னுடனேயே வைத்து கொண்டுள்ளார்.
இதனிடையே சிறுமி அரப்புஸ்ரா தாயை பார்க்க விரும்பி இருக்கிறார். பள்ளி முடிந்ததும் நேராக தாயை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். இதையறிந்து ஆத்திரமடைந்த அப்துல் சமது சிறுமியை அடித்து சித்ரவதை செய்திருக்கிறார். எதற்காக போனாய் என்றும் மும்தாஜ் எங்கு இருக்கிறார் எனவும் கேட்டு அடித்துள்ளார். வலி தாங்காமல் அலறிய சிறுமி, சாலைக்கு ஓடி வந்துள்ளார். அங்கு வைத்தும் சிறுமியை அப்துல் சமது தாக்கி இருக்கிறார்.
சிறுமியின் கையை முறுக்கியும், கீழே தள்ளி கழுத்தில் மிதித்தும் கொடூரமாக தாக்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைத்த அப்பகுதி மக்கள் தட்டி கேட்டனர். ஆனால் அவர்களையும் அப்துல் சமது மிரட்டி, மகளை மேலும் தாக்கி இருக்கிறார். தொடர்ந்து சிறுமி வலியால் கதறவே பொதுமக்கள் ஒன்று திரண்டு அப்துல் சமதை தாக்கினர். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இவை அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா ஒன்றில் பதிவாகியிருந்தது. அதை வைத்து அப்துல் சமது மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த காவலர்கள் அப்துல் சமதை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு நாள் தலைமை ஆசிரியை..! அதிரடியாக செயல்பட்டு அசத்திய அரசு பள்ளி மாணவி..!