அடுத்தடுத்து கிளப்பும் கொரோனா பீதி... பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மீனாட்சி அம்மன் கோயில்..!

By vinoth kumar  |  First Published Mar 13, 2020, 11:26 AM IST

சீனாவில் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 104-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே இந்த வைரஸ் தாக்குலுக்கு இதுவரை 3,136 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், சீன அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் பலி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 17 பேர் மட்டுமே புதிதாக உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்த வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 4011-ஆக அதிகரித்துள்ளது. 1.10 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது.

இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தியுள்ளது. 

சீனாவில் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 104-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே இந்த வைரஸ் தாக்குலுக்கு இதுவரை 3,136 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், சீன அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் பலி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 17 பேர் மட்டுமே புதிதாக உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்த வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 4011-ஆக அதிகரித்துள்ளது. 1.10 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 8 பேருக்கும், மகாராஷ்டிராவில் 3 பேருக்கும், கர்நாடகாவில் 3 பேருக்கும் நேற்று ஒரே நாளில் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் ஒருவரும், கேரளாவில் 14 பேரும், கர்நாடகாவில் 4 பேரும், உத்தர பிரதேசத்தில் 9 பேரும், டெல்லியில் 5 பேரும், லடாக் யூனியன் பிரதேசத்தில் 2 பேரும், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 5 பேரும், தெலங்கானாவில் ஒருவரும், ஜம்மு காஷ்மீர் யூனியனில் ஒருவரும், பஞ்சாப்பில் ஒருவரும் இந்த வைரசால் பாதித்துள்ளனர். 

இதை தமிழகத்தில் முற்றிலுமாக தடுக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள், வெளிநாடுகள் என பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூச்சுத் திணறல், ஜலதோஷம், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் கொண்ட பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறு நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

click me!