மருத்துவமனைக்கு யார் வந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம்... சுகாதாரத்துறை செயலாளர் அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumar  |  First Published Aug 16, 2020, 12:08 PM IST

கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 



கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

கொரோனா தடுப்பு சிறப்பு முகாமில் பங்கேற்றப்பின் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மருத்துவமனைக்கு யார் வந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படுகிறது. அதிகளவில் பரிசோதனை செய்யப்படுவதால், கொரோனா தொற்று பாதிப்பு சதவீதமும், இறப்பு சதவீதமும் குறைவாக இருக்கிறது.

Tap to resize

Latest Videos

மேலும், பேசிய அவர் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை சற்று உயர்வது போல் தோற்றம் உள்ளது. வேறு எந்த நோயில் இறந்தாலும்  அது கொரோனாவால் அவர்கள் இறந்ததுபோல் உள்ளது. குணமடைந்து வீடு திரும்பினாலும் 7,8-வது நாளில் மீண்டும்  பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் கால அளவு விரைவில் குறைக்கப்படும். நோயாளிளிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணங்களை திருப்தி தர நடவடிக்கை எடுத்துள்ளோம். கொரோனா தொற்று சவாலான நோயாக உள்ளது  எனவும் தெரிவித்துள்ளார். 

click me!