இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 2 , சென்னையில் 2 மற்றும் ஈரோட்டில் இருவர் என ஆறு நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 724பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 17பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.
இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 2 , சென்னையில் 2 மற்றும் ஈரோட்டில் இருவர் என ஆறு நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
6 new positive cases of in TN, 2 family contacts from , 2 contacts from CN5,6 ,1 contact of CN14 of Chennai, 1 25yr old fem, resident of chennai, admitted in Ariyalur GH reported positive , making the total tally to 35 so far.
— National Health Mission - Tamil Nadu (@NHM_TN)
தமிழ்நாட்டில் இருந்து கொரோனாவிற்கு அவர் முதல் நபராக பலியான நிலையில் அவரது குடும்பத்தினர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர். அதில் இருவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரையில் இதுவரை 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.